எதிர்க்கட்சியின் உண்மை முகம் இதுதான்… வாக்குச் சேகரிப்பில் அதிரடியாகப் பேசிய தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். தற்போது திருப்பத்தூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் முன் உரையாடி வருகிறார். அப்படி திருப்பத்தூரின் ஊத்துக்குளி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது. அரசியல் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கிறது.
மேலும் அதிமுகவை ஊழல் கட்சி எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கான விவாதத்திற்கு நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி விவாதத்தை தவிர்த்து வருகிறார். முடிந்தால் சொத்துக் குவிப்பில் யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை நேரடியாக விவாதித்து முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு எதிர்க்கட்சி தயாராக இருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசினார்.
மேலும், நான் ஒரு விவசாயியாக இருந்து வருகிறேன். எப்போதும் மக்களுக்காகவே பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஓடும் ரயிலில் ஏறி சென்னைக்கு வந்ததாகக் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி ஒடும் ரயிலில் ஏறி வந்த குடும்பத்திற்கு எப்படி இவ்வளவு சொத்துகள் சேர்ந்து இருக்கும் என்பதே எனது கேள்வி. எதிர்க்கட்சியைச் சார்ந்த பலருக்கும் அபரிதமான சொத்துகள் இருக்கிறது. நான் தமிழக முதல்வராக இருந்தாலும் ஒரு விவசாயியாகவே உணருகிறேன் எனப் பேசி மக்கள் முன் பாரட்டை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout