மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி. சென்னை திரும்புகிறார் முதல்வர்

  • IndiaGlitz, [Sunday,January 22 2017]

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்டம் எங்களுக்கு தேவையில்லை என்றும், நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் காட்சிபடுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மெரீனா மாணவர்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதி மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் ஜல்லிக்கட்டு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர் சென்னை திரும்புகிறார்.,

இருப்பினும் புதுக்கோட்டையில் அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து நடத்தி கொண்டிருப்பதாகவும், கோவையில் தமிழக அரசின் சார்பில் ரேக்ளா ரேஸ் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு

மாணவர்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக டெல்லி சென்ற முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசை வலியுறுத்தினார்...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது...

சூர்யாவின் 'சி 3' படத்தின் ரன்னிங் டைம்

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது...

தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். கவர்னர் பதவியை ஏற்க தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி

தமிழக இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

பீட்டாவுக்கு தமிழக அரசு தடை. வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

டா என்ற அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை வெகுசிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பீட்டாவுக்கே தமிழக அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.