நடிகர் விவேக் மகன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னகுமார் நேற்று மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்த செய்தி அறிந்ததும் கோலிவுட் திரையுலகினர் அனைவரும் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடிகர் விவேக்குக்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:
"தங்களின் அன்பு மகன் பிரசன்னகுமார் 29.10.2015 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், பிரசன்னகுமாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பிரசன்னகுமாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு முதல்வர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com