முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையின் தற்போதைய நிலவரம்

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிறிய அளவில் சர்ஜரி நடந்தது. இந்த சர்ஜரியால் அவருடைய உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்து அடுத்தகட்ட சிகிச்சை அவருக்கு அளிக்க அப்பல்லோ மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வருக்கு செய்யப்பட்ட சர்ஜரி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முதவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி ஆஞ்சியோ சிகிச்சை போன்றது என்றும் இந்த ஆஞ்சியோ சிகிச்சை என்பது இதய நாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்வதே என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதயம் மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும், அவர்களுடன் அவசர சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' சென்னை வசூல் நிலவரம்

விஜய் ஆண்டனியின் முந்தைய படமான 'பிச்சைக்காரன்' தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன். பிரபுதேவா

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி மற்றும் பலர் நடிப்பில் லட்சுமண் இயக்கியுள்ள 'போகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...

தேசிய விருது இயக்குனருடன் முதல்முறையாக இணையும் சிம்பு?

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரூபாய் நோட்டு பிரச்சனையையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது...

பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட 'ரெமோ' ரீமேக் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது...

'2.0' படப்பிடிப்பில் விபத்து. ரஜினிக்கு காயம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள விஐடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது...