20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏல மையம்… விவசாயிகளுக்காக முதல்வரின் புது திட்டம்!

கடந்த 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதியில் விளைகின்ற காய்கறிகள் தான் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இப்படி விளைகின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்காக அம்மாவின் அரசு ஒசூர் பகுதியில் சர்வதேச ஏலம் மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக் கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதியில் விவசாயிகள் மலர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். மலர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் அந்த மலர்களை பெங்களூருவில் சென்று விற்கிறார்கள். இதை சரிசெய்ய ஒசூரிலே சர்வதேச ஏல மையம் அமைய உள்ளது. இனி விவசாயிகள் இந்த மையத்தில் விற்பனை செய்து கொள்ளலாம்.

அதோடு விவசாயிகளின் விளைச்சலை ஊக்கும் விதமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மார்க்கெட் அமைத்து தர இருக்கிறோம். நீங்கள் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். மேலும் ஏல மையத்தில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். அந்த கிடங்குகளில் விவசாயிகளின் பொருட்களை வைத்து விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பண்ணை பொது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. நம் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடியும். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். தக்காளி நடவு செய்யும்போது கிலோ 40 ரூபாய்க்கு விற்கும். விற்பனை செய்யும்போது கிலோ 5 ரூபாய்க்கு வந்துவிடும்.

இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து விடுகிறார். இத்தகைய குறைகளைப் போக்குவதற்காக அதிமுக அரசு ஒசூர் பகுதியில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச ஏல மையத்தை அமைக்க உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, ஒசூர் ஒட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை எளிதாக விற்பனை செய்யவும் பதப்படுத்தவும் முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

More News

தனுஷூக்கு விருது கிடைக்கும் என சிலமணி நேரங்களுக்கு முன்பே கணித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் தனுசுக்கு 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி

'என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும்: 'தலைவி' டிரைலர்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத் நடிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிய 'தலைவி' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டி.இமானை வாழ்த்தும் ஆஸ்கர் நாயகன்… என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் அதிகளவு தமிழ் பெயர்கள் இடம் பிடித்து இருப்பது மிகவும் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

தனுஷ், விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் பல விருதுகளை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது

'அசுரன்' தேசிய விருது: நன்றி தெரிவித்து தனுஷ் எழுதிய கடிதம்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது