தைரியம் இல்லாதவர் அவர்… மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக முதல்வர் ஆவேசம்!

விஐபிக்கள் அதிமுள்ள சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் எம்.கே.மோகனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான கோகுல இந்திராவும் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் கோகுல இந்திராவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மு.க.ஸ்டாலினை குறித்து காட்டமாகக் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் கடந்த ஜனவரியில் இருந்தே சொல்லி வருகிறேன். அதிமுக அரசாங்கத்தின் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை விவாதத்தில் தெரிவியுங்கள். இதற்கு நான் உறுதியாகப் பதில் சொல்கிறேன்.

ஒரே மேடையில் இருந்து உங்களைக் குற்றச்சாட்டுகளை கூறினால் அதற்கு எளிதாக பதில் காண முடியும். அதேபோல சென்ற ஆட்சியின் குற்றச் சாட்டுகளையும் என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இத்தகைய விவாதத்திற்கு நானும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறேன். ஆனால் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வருகிறார். அவருக்கு தைரியம் இல்லை எனவும் காட்டமாகப் பிரச்சாரத்தின் போது கருத்துக் கூறியுள்ளார்.

More News

'மாஸ்டர்' இயக்குனருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தளபதி 65 படத்தில் இணைந்த பிரபலம்: படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும்

ஓபிஎஸ்-ன் தாயாரிடம் ஆசிபெற்ற ஈபிஎஸ்...! நெகிழ்ச்சியான தருணம்...!

அண்மையில் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தாரை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரின் தாயார் பழனியம்மாள் நாச்சியாரிடம் ஆசி பெற்றுக்கொண்டார். 

திண்டுக்கல் லியோனியைத் தட்டி கேட்க திராணி இருக்கிறதா? தமிழக முதல்வர் காட்டம்!

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பட்டிமன்ற நடுவராகவும் இருந்து வரும் திண்டுக்கல் லியோனியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

ஹோலி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்: வைரல் வீடியோ

தொலைக்காட்சி ஒன்றுக்காக ஹோலி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய தமிழ் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது