உட்பிரிவு சாதிகள் பொதுப்பெயருக்கு மாற்றம்… ஆனாலும் சலுகைகள் தொடரும்… முதல்வரின் தாராள அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அதோடு இந்த சாதிகளை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.
இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்தக் குழு அரசியல் கட்சியினர், அச்சமூகம் சார்ந்த இயக்கங்கள் மற்றும் மக்களிடையே மனுக்களை பெற்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது.
குழு பரிந்துரை அடிப்படையில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். எனினும் பொதுபெயரில் மேற்குறிப்பிட்ட சாதிகள் அழைக்கப்பட்டாலும் சமூக நிலைகளை கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பின்படி இவர்கள் பெற்றுவந்த சலுகைகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் பட்டியல் இனத்தவருக்கும் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அந்த சமூக மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்லும் அதே பாதையில் சென்று எல்லோருக்கும் வளர்ச்சி, யாருக்கும் பாதகம் இல்லை என்பது போல இந்த முதல்வரின் அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments