உட்பிரிவு சாதிகள் பொதுப்பெயருக்கு மாற்றம்… ஆனாலும் சலுகைகள் தொடரும்… முதல்வரின் தாராள அறிவிப்பு!!!

 

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அதோடு இந்த சாதிகளை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.

இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக கடந்த ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்தக் குழு அரசியல் கட்சியினர், அச்சமூகம் சார்ந்த இயக்கங்கள் மற்றும் மக்களிடையே மனுக்களை பெற்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது.

குழு பரிந்துரை அடிப்படையில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். எனினும் பொதுபெயரில் மேற்குறிப்பிட்ட சாதிகள் அழைக்கப்பட்டாலும் சமூக நிலைகளை கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பின்படி இவர்கள் பெற்றுவந்த சலுகைகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் பட்டியல் இனத்தவருக்கும் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அந்த சமூக மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்லும் அதே பாதையில் சென்று எல்லோருக்கும் வளர்ச்சி, யாருக்கும் பாதகம் இல்லை என்பது போல இந்த முதல்வரின் அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

More News

பும்ராவுக்கும் நடராஜனுக்கும் இத்தனை ஒற்றுமையா??? புள்ளிவிரவரத்தை அள்ளி வீசும் முன்னாள் வீரர்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த T.நடராஜன்.

டி ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் உஷா ராஜேந்தர்!

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் முரளி ராமசாமி சார்பில் அணியும், டி ராஜேந்தர் சார்பில் ஒரு அணியும் போட்டியிட்டது என்பதும் தெரிந்ததே.

எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை: சாட்டையை சுழற்றுவாரா கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பார்வையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் ஒருசில போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம்

ரஜினியுடன் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி சந்திப்பு: முக்கிய் ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்

விபூதி குங்குமப் பொட்டுடன் தமிழராக மாறிய வார்னர்: வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான  டேவிட் வார்னர், இந்திய அணிக்கு நடராஜன் என்ற வேகப்பந்து வீச்சாளரை