இச்சை ஆசைகள், குவியும் ஆபாச பேச்சுக்கள்....! கிளப்ஹவுசுக்கு என்னதான் ஆச்சு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிளப் ஹவுஸ் என்ற செயலியை பலரும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் என்ற சமூகவலைத்தளங்களுக்கு மத்தியில், புதிதாக வந்துள்ள கிளப்ஹவுஸ் என்ற அப்ளிகேஷன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த செயலியானது, இணையத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்.
கிளப் ஹவுசில் நடக்கும் ஆடியோ விவாதங்கள், ஒரு பக்கம் சமூகத்தின் மாற்றமாக இருந்தாலும், பலரும் அதை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் சமூக கருத்துக்கள், பெண் விடுதலை, நீட் தேர்வு பிரச்சனை, அரசியல் விவாதங்கள், சினிமா பொழுதுபோக்கு என மக்கள் நல்ல கருத்துக்களை விவாதித்து வருகிறார்கள்.
மற்றொரு பக்கம் ஆபாசத்தின் உச்சமாகவே விளங்குகிறது இந்த கிளப்ஹவுஸ். இங்கு விவாதிக்கப்படும் இடங்களை ரூம்கள் என்று அழைப்பார்கள், அந்த வகையில் கிளப்ஹவுசில் ஏராளமான ஆபாச ரூம்கள் உள்ளது என சொல்லலாம். ஹரஹராமகாதேவி போன்ற பெயர்களை வைத்துக்கொண்டு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை பல சபல இளைஞர்கள் செய்யும் சேட்டைகள் ஆபாசத்தின் உச்சமாகவே உள்ளது. குறிப்பாக அறிமுகம் இல்லாத பெண்களும், ஆண்களும் தங்களுடைய பாலியல் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் குறித்து இதில் விவாதிக்கும் கொடுமையும் நடந்து வருகிறது. இரட்டை அர்த்தங்களில் பேசுவது, எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என விவாதிப்பது, யாருடைய துணைகளை மாற்றிக்கொள்ளவிருப்பம், ஒரு அறையில் எத்தனை பேருடன் உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் என பல கேவலமான கேள்விகள் முகம் தெரியாத நபர்களுடன் விவாதிக்கப்படுகிறது.
முக்கியமாக பெண்களும் இதில் கலந்துகொண்டு சகஜமாக பேசுவதே, கொடூரத்தின் உச்சமாக இருந்து வருகிறது. பெண்களை குறித்து கமெண்ட் பதிவிடுவதை, அவர்களே ரசிப்பது அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரண்டு குழுக்களே இந்த கேவலமான கேவலமான செயல்களை செய்து வந்த நிலையில், தற்போது இக்குழுக்கள் அதிகமாகிவிட்டது. சமூகத்தை முன்னெடுக்கும் நோக்கில் பலர் பாடுபட்ட வர, காமுகர்களின் இந்த மாதிரியான செயல்கள் பொதுமக்களை முகம் சுழிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாதிரி தங்கள் இச்சைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருபவர்கள், சமூகத்தின் சாபக்கேடே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com