தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக்கை மூடுங்க: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ’தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்’ என அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் டாஸ்மாக் கடைகளை மட்டும் தமிழக அரசு கடந்த மே மாதமே திறந்துவிட்டது என்பது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ள திரையரங்குகளை திறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'ஐயா, மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே, துணை முதல்வர்கள் அவர்களே', டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் திறந்து விட்டீர்கள், தியேட்டர்களை ஏன் திறந்து விட மாட்டேன் என்கிறீர்கள்? திரையரங்குகளை திறந்து விடுங்கள், மக்கள் பொழுது போக்கிற்கு முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது, உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. அனைவரும் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். எனவே இது மிகவும் அவசியமான ஒன்று, இல்லையென்றால் கடுமையான போராட்டம் பண்ண வேண்டியதாக இருக்கும். ஒன்று தியேட்டர்களை திறந்து விடுங்கள் அல்லது அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூடுங்கள்.'
அடுத்ததாக இந்த ஓடிடி நிறுவனம் எங்கு இருக்கிறது. வெறும் சூர்யா படம், ஜோதிகா படம் மற்றும் பெரிய ஆட்களின் படங்களை மட்டுமே ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்றால், அந்த ஓடிடியும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம். அனைத்து நடிகர்களின் படங்களையும் போடுங்கள், தான் தயாரித்த 'கடம்பன் பாறை' எடுத்து வைத்து 2 வருடம் ஆகிறது. படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் இல்லை, எனவே ஓடிடியில் என்டர்டெயின்மெண்ட் படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.
பெரிய ஆள்களின் படங்கள் தான் போடுவேன் என நீங்கள் கூறினால், மக்கள் அனைவரும் பெரிய நடிகர்கள் படங்கள் தான் பார்ப்பேன் என அடம் பிடித்து கொண்டு அமர்ந்திருக்கிறார்களா? ஒன்னு ஓடிடியில் அனைத்து படங்களையும் போட்டு, நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஓடிடியும் வேண்டாம். ஒரு புடலங்காயும் வேண்டாம்... இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் யாருமே இதற்கு குரல் கொடுக்காமல் இருப்பது சரி இல்லை. அரசாங்கத்தை கேள்வி கேட்பதும் மக்களின் கடமை அது போல் ஒரு சாதாரண மனிதனாக நான் கேள்வி கேட்கிறேன்.
இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout