டியர் மோடி.. என்னைக் கொண்டாட வேண்டாம்..! பிரதமரின் மகளிர் தின மரியாதையை நிராகரித்த சிறுமி.

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தான் எல்லா சமூக வலை தளத்தில் இருந்தும் வெளியேறப் போவதாக கூறினார். அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதன் பிறகு அந்த கூற்றானது மகளிர் தின கொண்டாட்டத்திற்காக என்று கூறப்பட்டது.

மார்ச் 8ம் தேதி வரும் பெண்கள் தினத்தில் ஒரு நாள் பிரதமரின் டிவிட்டர் கணக்கை வாழ்க்கையில் சாதித்த பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எங்க கூறப்பட்டது. #sheinspiresUs என்ற ஹேஷ்டேக்கை உபயோகித்து உங்களின் வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருந்த பெண்களை பற்றி எழுங்காக்ள் என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் செயல்கள் மூலம் கவனம் ஈர்த்த பெண்களை பற்றிய பட்டியலை வெளியிட்டு வந்தது. அதில் மணிப்பூரைச் சேர்ந்த காலநிலை போராளி ஆறு வயதேயான லிஸிபிரியா கங்குஜம் அதில் இடம்பெற்றிருந்தார். இவர் இளம் காலநிலை போராளி. அப்துல்கலாம் கையால் விருது வாங்கியவர் என சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் லிஸிபிரியா கங்குஜம் தனக்கு கொடுக்கப்பட்ட இந்த மரியாதையை நிராகரித்து டிவீட் போட்டுள்ளார். அதில் டியர் மோடி என்னுடைய குரலைக் கேட்க தயாராய் இல்லாததால் நீங்ககள் தரும் இந்த மரியாதை எனக்கு வேண்டாம். உங்களுக்கு நன்றி. பலமுறை யோசித்த பிறகே இதை நான் சொல்கிறேன். என்று டிவீட் போட்டுள்ளார்.