ஏரி அருகே ராட்சத பாறை விழுந்து விபத்து: 20 பேர் மாயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏரி அருகே ராட்சஸ பாறை திடீரென சரிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் 20 பேர் மாயமாகி விட்டதாகவும் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பர்னாஸ் என்ற ஏரிக்கு தினந்தோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஏரி அருகே உள்ள பிரமாண்ட பாறைகள் இருப்பதால் படகுகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாறை அருகே சென்று பாறைகளின் அழகை கண்டு ரசிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று சுற்றுலா பயணிகள் மூன்று படகுகளில் பாறையின் அருகே சென்று பாறையின் அழகை ரசித்து கொண்டிருந்தபோது திடீரென பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இந்த பாறை இரண்டு படகுகளில் மேல் விழுந்ததால் அந்தப் படகுகளில் இருந்த சுற்றுலா பயணிகளில் 20 பேர் மாயமானதாகவும் ஐந்து பேர்களின் உடல் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பாறையின் அழகை சந்தோஷமாக பார்த்து ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
URGENTE!!! Pedras se soltam de cânion em Capitólio, em Minas, e atingem três lanchas. pic.twitter.com/784wN6HbFy
— O Tempo (@otempo) January 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout