கொரோனா கோரம்: டாய்லட் பேப்பருக்காக அடித்துக்கொண்ட வாடிக்கையாளர்கள் வைரலான வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா மனித உயிர்களை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி அது ஏற்படுத்திய பீதியால் மனித நேயத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சானிடைசர், வெப் வைபர், ஹேண்ட் வாஸ் பொருடகள், டாய்லட் ஷீட்டுக்களுக்கான தட்டுப் பாடு உலகம் முழுவதும் அதிகரித்து உள்ளது. இந்தத் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்ட சில நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கும் அவலங்களும் நடக்கிறது.
கிருமிநாசினி பொருட்களின் தட்டுப்பாடு உலகம் முழுவதுமே ஏற்பட்டு இருக்கும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை துரிதபடுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தற்போது டாய்லட் பேப்பருக்கான தட்டுப் பாடு அதிகரித்து இருக்கிறது. அந்நாடுகளில் டாய்லட் பேப்பர் அத்யாவசியமான ஒன்றாக இருக்கும் போது இந்த தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஒரு வணிகக் கடையில் டாய்லட் பேப்பருக்காக அடிதடியே நடந்து இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்து சிரிப்பதா? வருத்தப் படுவதா? என்றே தெரியாமல் பலர் தற்போது இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனாவின் மரண எண்ணிக்கை 3,890 ஐ எட்டி இருக்கிறது. மேலும், இத்தாலி, ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் வருந்தத் தக்க நிலவரமாக இருக்கிறது.
Fighting for toilet paper?This is shocking..."We just ask that people don't panic like this when they go out shopping. There is no need for it. It isn't the Thunderdome, it isn't MadMax, we don't need to do that," said an acting police inspector in Sydney????. #toiletpapercrisis pic.twitter.com/MlzSg5V9Y3
— Manuel Ribeiro (@manuelribeiro) March 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments