12ஆம் வகுப்பு மட்டுமே படித்த சைபர் க்ரைம் நபர்.. தினமும் ரூ.5 கோடி சம்பாதித்தவர் கைது..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

12ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஒரு குழுவை ஏற்படுத்தி தினமும் 5 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி செய்து சம்பாதித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 49 வயது நபர் ஸ்ரீனிவாச ராவ். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு விலையுயர்ந்த ஓட்டலில் ரூம் எடுத்து ஆன்லைன் மூலம் மோசடி செய்து வந்ததாக தெரிகிறது. 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவருக்கு தொழில்நுட்ப அறிவு இருந்ததை அடுத்து பல முறைகேடுகளை செய்துள்ளதாகவும் விசாரணையில் வெளியாகி உள்ளது.

மேலும் இவரது வங்கி கணக்கில் தினமும் 5 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கும்பல் முதலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது போல் நடித்து டெலிகிராம் செயலிகளில் பலருடன் தொடர்பு கொண்டு உள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் பெரும்பாலும் பெண்களை குறி வைத்து தங்களை போலீஸ் அதிகாரி போல் காட்டிக்கொண்டு அவர்கள் அனுப்பிய கூரியரில் போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்ததாக கூறுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களது வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று வருமானவரித்துறையினர் போல் இன்னொருவர் பேசுவார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்து வங்கி கணக்கை விவரங்களை பகிர்ந்துள்ளனர் என்பதும் ஒரு சிலர் ஓடிபி எண்ணையும் பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பாவிகளின் வங்கி கணக்கிலிருந்து இருந்து மோசடியாக பணம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர் இந்த கும்பல் குறித்த தகவல் மும்பை போலீசருக்கு தெரிய வந்ததை அடுத்து, ரியல் ஸ்டேட் தொழில் அதிபர்கள் போல் நடித்து ஸ்ரீநிவாஸ் ராவை அணுகி அவரை கைது செய்தனர். அவரது வங்கி கணக்குகள் தினமும் 5 கோடி முதல் 10 கோடி வரை பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதும் சுமார் 40 வங்கி கணக்கு இருப்பதையும் கண்டுபிடித்த போலீஸ், அனைத்து கணக்குகளையும் முடக்கியதோடு, ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.