'கோலி சோடா 2' படத்தை வெளியிடும் நிறுவனம் எது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது கோலிசோடா 2' என்ற படத்தை விஜய்மில்டன் இயக்கி முடித்துள்ளார். வரும் 29ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' என்ற நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே இதே நிறுவனம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் வி சத்யமூர்த்தி இதுகுறித்து கூறியதாவது: இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து வருகிறது 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனம்.
"விஜய் மில்டனின் படங்கள் யாவும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த கோலிசோடா 2 படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவுதம் வாசுதேவ் மேனன் குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும் டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. விஜய் மில்டன் மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன் என்று வி.சத்யமூர்த்தி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com