கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்த குமாரவேல் சமீபத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் நடத்தி வந்த வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அதே நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை கோவை சரளா மற்றும் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர்களுடன் குமாரவேலுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலக கமல்ஹாசனிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கமல்ஹாசன் தரப்பு அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குமாரமேல், கடலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென அவர் பதவி விலகியுள்ளது அக்கட்சியினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.