கொரோனா விஷயத்தில் நகரங்கள் ரொம்பவே மோசம்!!! மத்திய அரசு கருத்து!!!

  • IndiaGlitz, [Friday,June 12 2020]

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கிராமப் புறங்களை விட இந்திய நகர்ப்புறங்களில் 1.09% என்ற அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உயிரிழப்பு 396 ஆக பதிவாகி இருக்கிறது. இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இதுவரை இந்தியாவில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உயிரிழப்புகள் 8,498 ஆக பதிவாகி இருக்கிறது.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி இந்தியாவில் கடந்த 10 நாட்களாக குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. கடந்த மே 24 ஆம் தேதி உலக கொரோனா வரிசைப் பட்டியலில் இந்தியா 10 ஆவது இடத்தைப்பிடித்து இருந்தது. ஆனால் வெறுமனே 18 நாட்களில் தற்போது இந்தியா 4 ஆம் இடத்திற்கு முந்தியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து அதிகப் பாதிப்பு உள்ள நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இதில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3,609 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஜுன் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டது. தளர்வு செய்யப்பட்டதில் இருந்து கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரமாக பதிவாகிறது என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் நகரங்கள் அதிகப் பாதிப்பை கொண்ட இடமாக இருக்கிறது என்றும் நகரங்களில் நோய்த்தொற்று 1.09 விழுக்காடு அதிகமாக இருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருககிறது. கிராமங்களைவிட நகரங்களில் இருக்கும்போது நோய்த்தொற்று ஏற்படுவதற்கு 1.89 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் முழு ஊரடங்கா? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் தினந்தோறும் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் சென்னையில்தான் பாதிப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது

பால், ரோஜாப்பூ பாத்டேப்பில் பிரபல நடிகை குளியல்

பாத்டேப்பில் இதுவரை தண்ணீர் மற்றும் சோப்பு நுரையை வைத்து தான் குளிப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை ஒருவர் பாத்டேப்பில் பால் மட்டும் ரோஜா பூ வைத்து அதில் குளியல் போட்டு

சாகவும் துணிந்த ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷூக்காக சாகவும் தயார் என கூறிய ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இங்கிலாந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளியது இந்தியா: ஒருநாள் பாதிப்பில் 3வது இடம்

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலக அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

ஹோட்டல் உரிமையாளருக்கு 1446 ஆண்டு சிறை!!! அப்படி என்ன செய்தார் தெரியுமா???

தாய்லாந்து நாட்டில் ஒரு ஹோட்டல் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்து வதற்காக எடுத்த முடிவு தற்போது அவர்களுக்கே பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.