பிரபல இளம் நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]

அருள்நிதி நடித்த 'வம்சம்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற திரைப்படங்களிலும், 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட ஒருசில சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மைனாநந்தினி. இவருடைய கணவர் கார்த்திகேயன் சற்று முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
நடிகை நந்தினியும், கார்த்திகேயனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னையில் சொந்தமாக ஜிம் வைத்துள்ள கார்த்திகேயன் ஜிம் மாஸ்டராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.