தளபதி விஜய்யின் 'கோட்' படத்தில் இணைந்த பிரபலத்தின் 16 வயது மகள்.. என்ன கேரக்டர்?

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபலத்தின் 16 வயது மகள் இணைந்து உள்ளதாகவும் அவர் விஜய்யின் மகளாக நடித்து வருவதாகவும் கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னை, புதுச்சேரி உள்பட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயது மகள் அபியுக்தா என்பவர் நடிகை ஆக அறிமுகமாகிறார் என்றும் இவர் இந்த படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பரதநாட்டிய நடனக்கலைஞர் மற்றும் மாடலாக இருந்து அபியுக்தா, ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் கலந்து கொண்டதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.