இளையதளபதி விஜய் ஒரு மேஜிக்மேன். ஒளிப்பதிவாளர் சுகுமார்

  • IndiaGlitz, [Wednesday,December 21 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படம் வரும் பொங்கல் தினத்தின் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

விஜய்-பரதனின் முந்தைய படமான 'அழகிய தமிழ்மகன்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய தான், மீண்டும் இணையும் அதே கூட்டணியில் ஒளிப்பதிவாளராக பண்புரிவதில் எல்லையற்ற மகிழ்ச்சி என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இளையதளபதி விஜய் ஒரு மேஜிக்மேன். அவருடைய நடனத்திறமை ஒரு உதவி நடன இயக்குனரின் திறமையைவிட அதிகமானது. ஸ்டெப்ஸ்களை ஒரு தடவை பார்த்தாலே போதும் ரிகர்சல் ஏதுமின்றி ஆடி அனனவரையும் அசத்திவிடுவார்.

அதேபோல் சண்டைக்காட்சிகளில் மல்டிபிள் கேமிராக்கள் வைக்கப்பட்டிருந்தாலும் கேமிராக்களின் கோணங்களுக்கு ஏற்ப மார்க் செய்த இடத்தில் மிகச்சரியாக இருப்பார்.

மேலும் நேரத்தில் சரியாக கடைபிடிப்பவர்களில் அவர் நம்பர் ஒன் நடிகர். அதுமட்டுமின்றி சக நடிகர்கள், டெக்னீஷியன்களிடம் மரியாதையாகவும், கனிவோடும் பேசுவார். யாரையும் மனது புண்படும்படி அவருக்கு பேச தெரியாது.

காலையில் செட்டுக்கு வந்ததும் அவர் சொல்லும் ஒரு வாழ்த்தும், வணக்கமும், அந்த நாள் முழுவதிற்கும் பூஸ்ட் கொடுக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு 'பைரவா' படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் கூறியுள்ளார்.