விஜய்க்கு இது வேற லெவல் படம். 'பைரவா' ஒளிப்பதிவாளர் சுகுமார்

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முற்றிலும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் விஜய்க்கு வேற லெவல் படமாக இருக்கும் என்று இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 'இது ஒரு வித்தியாசமான விஜய் படமாக இருகும். விஜய் படம் என்றாலே பாடல்களும், நடனமும், சண்டைக்காட்சிகளூம், பிரதானமாக இருக்கும். 'பைரவா' வேறு லெவல். வழக்கமான விஜய் படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். பாடல்கள், நடனம், சண்டைக்காட்சிகள் ஆகிய மூன்றும் மற்ற படங்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். விஜய், நடிப்பு, நடனம், சண்டை ஆகிய மூன்றிலும் மிரட்டியுள்ளார்' என்று கூறியுள்ளார்.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.