சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா'வில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரமுகர்

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் கனவுப்படமும், பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்டமான படமுமான 'சங்கமித்ரா' இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சுதீப் சட்டர்ஜி என்ற பாலிவுட் ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 'தூம் 3', 'பாஜிராவ் மஸ்தானி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள இவர் தற்போது 'சங்கமித்ரா' படத்தில் இருந்து வருத்தத்துடன் விலகியுள்ளதாக தனது சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார்.

இப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் 'பத்மாவதி' படத்தின் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 'சங்கமித்ரா'வில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேறொரு முன்னணி ஒளிப்பதிவாளரிடம் படக்குழுவினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சாபுசிரில் கலை வண்ணத்தில், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.