விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Monday,March 06 2017]
தமிழ் சினிமா உலகில் மிக அதிகமான படங்களில் நடித்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி ஒருவரே. கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 9 படங்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு அவர் தற்போது எட்டு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் தான் 'கருப்பன்'
'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கி வரும் 'கருப்பன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் திடீரென ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராம்ஜி, சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் பிசியாக இருப்பதால் தற்போது ராம்ஜிக்கு பதிலாக சக்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இவர் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய 'ரேணிகுண்டா' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒளிப்பதிவாளர் சக்தி சமீபத்தில் 'இறுதிச்சுற்று' படத்தின் தெலுங்கு பதிப்பின் பணியை முடித்துள்ள நிலையில் தற்போது 'கருப்பன்' படத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, கிஷோர், பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களின் ஸ்ரீசூர்யா மூவீஸ் தயாரித்து வருகிறது.