இயக்குனர் மணிரத்னம் அவர்களின் 9 வயது நண்பர் இவர்தான்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனிமையை விரும்புபவர் என்பதும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி மிகச்சிலரே இருக்கின்றனர் என்பதும் கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை
இந்த நிலையில் மணிரத்னம் அவர்களுக்கு 9 வயதில் ஒரு நண்பர் இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அவர்தான் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் மகன் சர்வஜித்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது மகன் மணிரத்னம் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதில், 'எனது 9 வயது மகன் சர்வஜித் அவருடைய நண்பர் மணிரத்னம் அவர்களுடன் உள்ளார்' என்று பதிவு செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் எடுத்துள்ள இந்த கருப்பு வெள்ளை புகைப்படம் எந்த அளவுக்கு அட்டகாசமாக இருந்தது என்பதை நாம் சொல்ல தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.