இயக்குனர் ஹரி படங்களின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

கோலிவுட் திரையுலகின் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று மதியம் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்து கடந்த 1992ஆம் ஆண்டு 'வா வா வசந்தமே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் ப்ரியன்

பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் 3.30 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த ப்ரியன் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

கேரளாவுக்கு வந்த 750 டன் செல்லாத ரூபாய் நோட்டுக்கள்! ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெற்ற இந்த செல்லாத நோட்டுக்கள் என்ன ஆகின என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயா டிவி ரெய்டு நடக்கும்ன்னு நினைச்சேன்: நடிகை கஸ்தூரி

கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து தனது பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருபவர் நடிகை கஸ்தூரி.

ஜெயலலிதா இருந்திருந்தால் ரெய்டுக்கு வந்திருப்பார்களா? சி.ஆர்.சரஸ்வதி

நாடு முழுவதிலும் உள்ள சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இன்று காலை முதல் வருமான வரித்துறை அலுவலகர்களால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நடனக்கலைஞர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த நன்கொடை

தளபதி விஜய் ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு பின்னரும் ஒரு குறிப்பிட்ட தொகை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு நன்கொடை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

சிறையில் அடைத்தாலும் பின்னர் வெளியே வந்து பதிலடி கொடுப்போம்:  டிடிவி தினகரன்

இன்று காலை முதல்  ஜெயா டிவி உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.