இயக்குனர் ஹரி படங்களின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Thursday,November 09 2017]

கோலிவுட் திரையுலகின் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று மதியம் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்து கடந்த 1992ஆம் ஆண்டு 'வா வா வசந்தமே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் ப்ரியன்

பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களுக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் 3.30 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த ப்ரியன் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.