கேப்டன் மகனின் அடுத்த படத்திற்கு எம்.ஜி.ஆர். பட டைட்டில்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் அவர் அருண் இயக்கத்தில் 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இந்த படத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்று குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. சண்முகப்பாண்டியனின் அடுத்த படத்தின் டைட்டில் 'மதுரை வீரன்'. இதே டைட்டிலில் கடந்த 1956ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி நடிப்பில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கவுள்ளார். 'காதல் கொண்டேன்', 'சகுனி', 'சேட்டை', 'சண்டிவீரன்' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முத்தையா இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
'மதுரை வீரன்' படத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout