சினிமா டிக்கெட் கட்டணம் உயருகிறதா? திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் திரையரங்குகளில் 3 காட்சிகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்கப்படும் என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக திரையரங்குகள் உரிமையாளர்கள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்த படாது என்றும், முன்பு இருந்த கட்டணம்மே இன்று முதல் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் 40 சதவீத திரையரங்குகள் மட்டுமே இன்று திறக்கப்படுவதாகவும், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்கள் திரையிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று திரையரங்குகளில் ரசிகர்கள் திரைப்படம் பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பார்த்திபன் படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழும் ரயில்: திரைப்பட படப்பிடிப்பின் திகில் வீடியோ!

மலையிலிருந்து ஓடும் ரயில் இன்ஜின் ஒன்று பள்ளத்தாக்கில் விழும் காட்சியின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தல அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

தல அஜித் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் 'வேதாளம்'. கடந்த 20115ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப்

'காஞ்சனா 3' படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது