சினிமா டிக்கெட் கட்டணம் உயருகிறதா? திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்
- IndiaGlitz, [Monday,August 23 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் திரையரங்குகளில் 3 காட்சிகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்கப்படும் என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக திரையரங்குகள் உரிமையாளர்கள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் இன்று பேட்டி அளித்தபோது ’சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்த படாது என்றும், முன்பு இருந்த கட்டணம்மே இன்று முதல் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 40 சதவீத திரையரங்குகள் மட்டுமே இன்று திறக்கப்படுவதாகவும், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்கள் திரையிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்று திரையரங்குகளில் ரசிகர்கள் திரைப்படம் பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.