ஜிஎஸ்டி: சென்னையில் ஆன்லைன் புக்கிங் திடீர் நிறுத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது. எனவே நாளை முதல் பல்வேறு பொருட்களின் விலை மற்றும் கட்டணங்களில் பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்குகள் கட்டணம் குறித்து இன்னும் ஒரு தெளிவு ஏற்படாததால் சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நாளைய காட்சிகளுக்கு ஆன்லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில திரையரங்குகளில் முன்பதிவுக்கான கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு டிக்கெட்டுக்கான கட்டணத்தை நாளை வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் ரூ.100க்குள் உள்ள கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி வரியும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரிவிலக்கு இல்லாத திரைப்படங்களுக்கு தமிழக அரசின் நகராட்சி வரி 30% வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலானால் இந்த 30% வரி உண்டா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசின் அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் வரி என இரண்டையும் சேர்த்து கட்டவேண்டிய நிலை ஏற்பட்டால் இன்றைய ரூ.120 டிக்கெட் நாளை ரூ.200 ஆக மாற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திருட்டு டிவிடி, ஆன்லைன் பைரசி ஆகியவற்றால் தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் 50%க்கும் மேல் வரி என்றால் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout