ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: எங்கே இருந்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 15 2022]

தமிழ் திரை உலகின் ஸ்டண்ட் மாஸ்டர் களில் ஒருவரான கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனல்கண்ணன் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் புதுச்சேரியில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றினால்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசினார் என்பதும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிரஞ்சீவி உறவினருக்கு திருமணம்.. மணப்பெண்ணும் ஒரு நடிகை தான்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான பவன் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? விரைவில் வீடியோ ரிலீஸ்!

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய  'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விஜய் சென்ற அதே இடத்திற்கு செல்லும் அஜித்: எந்த இடம் தெரியுமா?

 விஜய் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்ற அதே இடத்தில் அஜித் நாளை முதல் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் 4 சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த ‘மாமனிதன்‘ திரைப்படம்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமனிதன்‘

ஐபிஎல்- போட்டியில் இப்படியுமா? கன்னத்தில் அறைந்ததாக முன்னணி வீரர் பகீர் குற்றச்சாட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ஒருவர் தன்னை 3-4 முறை கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து முன்னணி வீரர் ராஸ்