தேசிய கொடியுடன் திரையுலக நட்சத்திரங்கள்! வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,August 15 2022]

இந்தியா முழுவதும் இன்று 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தேசிய கொடி ஏற்றி சிறப்பு உரையாற்றினார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக நட்சத்திரங்களும் இன்றைய சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’கேஜிஎப்’ நடிகர் யாஷ் சமூக வலைத்தளத்தில் தனது குடும்பத்துடன் தேசியக்கொடியுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் தேசியக்கொடி அருகே நின்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் மோகன்லால், பாடகி சித்ரா, நடிகர் சோனு சூட் ஆகியோரும் நடிகை அனுஷ்கா தனது கணவர் விராத் கோஹ்லியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தியுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்கள்.

நடிகர் சூரி தனது வீட்டில் தேசிய கொடியேற்றியதை அடுத்து அந்த கொடியின் அருகே எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், இசைஞானி இளையராஜா உள்பட பலர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Wine + Dinner = Winner: பிரபல கவர்ச்சி நடிகையின் வேற லெவல் புகைப்படம்!

பிரபல கவர்ச்சி நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Wine + Dinner = Winner என்ற கேப்ஷனுடன் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: எங்கே இருந்தார் தெரியுமா?

 தமிழ் திரை உலகின் ஸ்டண்ட் மாஸ்டர் களில் ஒருவரான கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிரஞ்சீவி உறவினருக்கு திருமணம்.. மணப்பெண்ணும் ஒரு நடிகை தான்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான பவன் தேஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? விரைவில் வீடியோ ரிலீஸ்!

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய  'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விஜய் சென்ற அதே இடத்திற்கு செல்லும் அஜித்: எந்த இடம் தெரியுமா?

 விஜய் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்ற அதே இடத்தில் அஜித் நாளை முதல் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.