ஒரே விளையாட்டு.. ஒரு அணி.. ஒரு மனிதன்.. தோனிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றிய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் பல திரையுலக பிரபலங்களும் தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அளிக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வரலட்சுமி தனது சமூக வலைதளத்தில் ’என்ன ஒரு இறுதிப் போட்டி, மூன்று நாட்கள் நீண்டாலும் முற்றிலும் காத்திருந்ததற்கு மதிப்பு கிடைத்தது. பதற்றம், பைத்தியம், காதல் அனைத்தும் சேர்ந்த ஒரே விளையாட்டு.. ஒரே அணி.. ஒரே மனிதன்.. தோனி தான். கடவுளே! நான் இன்று கிட்டத்தட்ட இறந்து விட்டேன், ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம், நாங்கள் சாம்பியன்கள் ஆகி விட்டோம், ஜடேஜா ராக் ஸ்டார், எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’அந்த வெற்றி தருணம், சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்று, Yessss நாங்கள் தான் சாம்பியன்கள், லவ் யூ சிஎஸ்கே மற்றும் தோனி, நன்றி ஜடேஜா, சிஎஸ்கேவுக்கு விசில் போடு’ என்று கூறியுள்ளார்.
நடிகை பிந்துமாதவி தனது சமூக வலைத்தளத்தில் ‘லெஜண்ட் அம்பத்தி ராயுடு இன்றுடன் ஓய்வு பெறுகிறார், நல்ல முடிவு.. மிகச்சிறந்த ஃபைனல், தோனி, ராயுடு, ஜட்டுவுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு சிஎஸ்கே வெற்றி குறித்து கூறியபோது, ‘சென்னைவாசிகளாகிய நாங்கள் சிஎஸ்கே கோப்பையை பிடிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது. நம் தலயும் அவர் மீதான காதலும் ஒப்பிட முடியாதது. தோனி, நீங்கள் ஒரு மேதை. சிஎஸ்கேவின் அனைத்து சிறந்த குழுவிற்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
பாடகி ஸ்வேதா மோகன் கூறியபோது, ‘டேய்.. சென்னைடா... சென்னை சூப்பர் கிங்ஸ் டா..ஜடேஜாவுக்கு ஒரு சல்யூட், இனி ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் ஜடேஜாவை கேட்போம், அனைத்திற்கு நன்றி தல தோனி.. என்று பதிவு செய்துள்ளார்.
That Winning Moment ❤️😍❤️
— Sathish (@actorsathish) May 29, 2023
One Of The Best Final 💪💪
Yessss We are the Champions 😍😍😍
Love u @ChennaiIPL and @msdhoni ❤️
Thank u @imjadeja 🙏🏻🙏🏻🙏🏻 #Csk ku Whistle Podu ❤️❤️❤️ pic.twitter.com/AtEv6kWSxQ
Wattteeee finalsss..3 days long..totally worth the wait.. the tension..the madness..the love all for one game..one team..one man..#cricket #csk @msdhoni ...my god I died today..but we did it..we are the champions..@imjadeja u rockstar.. every single player in our team we 💛💛 u pic.twitter.com/TsCuRW4tFc
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 29, 2023
Ambati Rayudu lifting the 🏆💛💛💛💛 thanku legend, my heart is full💛 goodnyt #csk #dhoni #rayudu #Jaddu
— Bindu Madhavi (@thebindumadhavi) May 29, 2023
To the greatest finale💛 pic.twitter.com/R321P57ep0
We as chennaites can't be happier to see #CSK holding the cup. Our Thala and love for him is beyond comparison. @msdhoni , you are a genius. Thank you and to the entire brilliant team of #CSK for bringing the glory and the cup home. 🎉🎉🎉👏👏👏🙏🙏🙏🙏♥️♥️#CSKKuWhistlePodu… pic.twitter.com/43wECfZMWC
— KhushbuSundar (@khushsundar) May 30, 2023
Deiii #Chennai daaa... 👑 #ChennaiSuperKings daaaaa 🦁 💥✨#CSK @ChennaiIPL
— Shweta Mohan (@_ShwetaMohan_) May 29, 2023
We owe you a salute @imjadeja for every game of this #IPL , being the champ while the stadium asked for 7 🙏🏽
Thank you for everything Thala @msdhoni 🙏🏽🙏🏽💓💓
Proud of Chennai champ #SaiSudharsan 💥 pic.twitter.com/2jKU0Tux6V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com