பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல சினிமா விமர்சகர்.. அபிஷேக் போல் ஆகாமல் இருந்தால் சரி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

தற்போது வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, குக் வித் கோமாளி போட்டியாளர் தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் போட்டியாளர் ராஜலட்சுமி, சீரியல் நடிகை மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், அமுதவாணன், ஜிபி முத்து, நடிகை மனிஷா யாதவ், நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் மன்சூர் அலிகான், தொகுப்பாளர் ரக்சன் உள்பட ஒருசிலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் திரைப்படங்களை உடனுக்குடன் பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்யும் கிறிஸ்டோபருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சீசனில் சினிமா விமர்சகர் அபிஷேக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது போல் கிரிஸ்டோபரும் பெறுவாரா? அல்லது இந்த நிகழ்ச்சி அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயமா? அதிர்ச்சி தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடிக்கும்

ரகசியமாக நடந்த ராஜ்கிரண் மகள் திருமணத்தை உலகமே அறிய நடத்தி வைத்தது யார் தெரியுமா? வீடியோ வைரல்

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணம் தற்போது உலகமே அறிய நடத்தி வைக்கப்பட்ட வீடியோ

3 மொழிகளில் தனுஷின் அடுத்த படம்: படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது

'பொன்னியின் செல்வன்' இளவயது நந்தினி கேரக்டரில் இந்த குழந்தை நட்சத்திரமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருந்தது என்பது தெரிந்ததே. இதனால் சின்ன சின்ன கேரக்டர்கள்

மஞ்சுவாரியரை அழகாக ஆட வைத்த பிரபுதேவா.. 7 மொழிகளில் உருவாகும் படத்தின் பாடல்!

தமிழ் உள்பட ஏழு மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றின் பாடலுக்கு மஞ்சு வாரியாரை அழகாக ஆடவைத்து நடன இயக்குனர் பிரபுதேவாவின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.