சென்னையில் மூடப்பட்ட முப்பது ஆண்டுகால சினிமா பொக்கிஷம்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த சினிமா வீடியோ நூலகம் தற்போது மூடப்பட்டது.

கடந்த 1983ஆம் ஆண்டு 75 வீடியோ கேசட்டுக்கள் கொண்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் தொடங்கப்பட்ட டிக் டாக் மூவி வாடகை நூலகம், குறுகிய காலத்தில் 35000 வீடியோ கேசட்டுக்கள் கொண்ட கடையாக மாறியது.

கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் ஒரு காலத்தில் இந்த நூலகத்தின் ரெகுலரான வாடிக்கையாளர்களாக இருந்தனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணுவர்தன் உள்பட பலர், இயக்குனர்களாகும் முன்பே இந்த நூலகத்திற்கு ரெகுலராக வருவார்களாம்

ஆனால் காலப்போக்கில் திருட்டு வீடியோ, ஆன்லைனில் புதிய திரைப்படம் போன்ற நவீன டெக்னால்ஜி மூலம் நடைபெற்று வரும் முறைகேடுகள் காரணமாக இந்த நூலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர். தற்போது கனத்த இதயத்துடன் இந்த சினிமா நூலகத்தை மூடினாலும், இதன் மூலம் கிடைத்த நீங்கா நினைவுகள் என்றும் அழியாது என்றும் இதன் உரிமையாளர் பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.

More News

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி. 'சி 3' தயாரிப்பாளர் தகவல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சூர்யா, ஞானவேல்ராஜா, ஹரி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்...

என்னையும் கைது செய்யுங்கள். சிம்புவின் ஆவேச பேட்டி

சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றாலும் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன...

'சிவலிங்கா'வை முந்துகிறதா 'மொட்டசிவா கெட்டசிவா'

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஹாரர் காமெடி படமான 'சிவலிங்கா' படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்திற்கு முன்பே அவர் நடித்த இன்னொரு படமான 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சென்னை மெரீனாவில் திடீர் 144 தடை. நடைப்பயிற்சி செல்ல முடியுமா?

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சூப்பர் ஹிட் ஜோடி

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, தமன்னா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இன்னும் சொல்லப்போனால் பிரபல அரசியல்வாதிகளிடம் இருந்தும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது...