சென்னையில் மூடப்பட்ட முப்பது ஆண்டுகால சினிமா பொக்கிஷம்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த சினிமா வீடியோ நூலகம் தற்போது மூடப்பட்டது.

கடந்த 1983ஆம் ஆண்டு 75 வீடியோ கேசட்டுக்கள் கொண்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் தொடங்கப்பட்ட டிக் டாக் மூவி வாடகை நூலகம், குறுகிய காலத்தில் 35000 வீடியோ கேசட்டுக்கள் கொண்ட கடையாக மாறியது.

கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் ஒரு காலத்தில் இந்த நூலகத்தின் ரெகுலரான வாடிக்கையாளர்களாக இருந்தனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணுவர்தன் உள்பட பலர், இயக்குனர்களாகும் முன்பே இந்த நூலகத்திற்கு ரெகுலராக வருவார்களாம்

ஆனால் காலப்போக்கில் திருட்டு வீடியோ, ஆன்லைனில் புதிய திரைப்படம் போன்ற நவீன டெக்னால்ஜி மூலம் நடைபெற்று வரும் முறைகேடுகள் காரணமாக இந்த நூலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர். தற்போது கனத்த இதயத்துடன் இந்த சினிமா நூலகத்தை மூடினாலும், இதன் மூலம் கிடைத்த நீங்கா நினைவுகள் என்றும் அழியாது என்றும் இதன் உரிமையாளர் பிரகாஷ்குமார் கூறியுள்ளார்.