டி.இமானை வாழ்த்தும் ஆஸ்கர் நாயகன்… என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் அதிகளவு தமிழ் பெயர்கள் இடம் பிடித்து இருப்பது மிகவும் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்த இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்-இயக்குநர் பார்த்திபன், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய விருதுபட்டியலில் இடம்பிடித்த இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய டிவிட்டர் பதிவில், “கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்பான இசை காதலர்களின் தொடர்ச்சியான ஆதரவு! சிறந்த இசை இயக்குநர் வகையில் தமிழ் இசைக்கு கிடைத்த தேசிய விருது அறிவிப்பில் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். கடவுளைத் துதியுங்கள்” எனப் பதிவிட்டு உள்ளார்.
டி.இமானின் இந்த பதிவினை ரீ-டிவிட் செய்த ஆஸ்கர் நாயகன் ஏர்.ஆர்.ரஹ்மான், “வாழ்த்துகள்… மிக தகுதியானர்” என வாழ்த்தி இருக்கிறார். தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் “கண்ணான கண்ணே“, “வானே”, அடிச்சி தூக்கு” போன்ற பாடல்கள் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Congratulations ...well-deserved ?? https://t.co/75Gyb7DsL2
— A.R.Rahman (@arrahman) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments