டி.இமானை வாழ்த்தும் ஆஸ்கர் நாயகன்… என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் அதிகளவு தமிழ் பெயர்கள் இடம் பிடித்து இருப்பது மிகவும் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்த இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்-இயக்குநர் பார்த்திபன், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய விருதுபட்டியலில் இடம்பிடித்த இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய டிவிட்டர் பதிவில், “கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்பான இசை காதலர்களின் தொடர்ச்சியான ஆதரவு! சிறந்த இசை இயக்குநர் வகையில் தமிழ் இசைக்கு கிடைத்த தேசிய விருது அறிவிப்பில் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். கடவுளைத் துதியுங்கள்” எனப் பதிவிட்டு உள்ளார்.

டி.இமானின் இந்த பதிவினை ரீ-டிவிட் செய்த ஆஸ்கர் நாயகன் ஏர்.ஆர்.ரஹ்மான், “வாழ்த்துகள்… மிக தகுதியானர்” என வாழ்த்தி இருக்கிறார். தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் “கண்ணான கண்ணே“, “வானே”, அடிச்சி தூக்கு” போன்ற பாடல்கள் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ், விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் பல விருதுகளை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது

'அசுரன்' தேசிய விருது: நன்றி தெரிவித்து தனுஷ் எழுதிய கடிதம்!

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரன்னிங் டைம் எவ்வளவு?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல்- பா.ஜ.க தேர்தல் அறிக்கை!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து களம் காணும் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது

தேர்தல் துளிகள்: 23 மார்ச் 2021

திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டங்களை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்