சினிமா ஐ.சி யூவில் இருக்கிறது: பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் கவலை

  • IndiaGlitz, [Sunday,May 12 2019]

குழந்தை ஏசு இயக்கிய 'அந்த நிமிடம்' என்ற திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டார். இவருடைய உதவியாளர் தான் அந்த நிமிடம்' இயக்குனர் குழந்தை ஏசு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் குழந்தை ஏசு பேசியதாவது:

குழந்தை ஏசுவை எனக்கு சிறுவயது முதல் தெரியும். அவர் இயக்கிய அந்த நிமிடம்' படத்தின் டிரைலரையும் பாடலையும் பார்த்து திருப்தி அடைந்தேன். அவருக்கு நான் சொல்லி கொள்ளும் ஒரே ஒரு அறிவுரை என்னவெனில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாதவாறு படம் இயக்க வேண்டும் என்பதுதான். தயாரிப்பாளர்கள் தான் வேர். அதில் தண்ணீர் ஊற்றினால்தான் செடி நன்றாக வளரும்.

அதேபோல் இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, புகழை தலையில் வைக்காமல், கவலையை நெஞ்சில் வைக்காமல், நிம்மதியாக படம் எடுங்கள். தயாரிப்பாளரை காக்கும் வகையில் படம் எடுங்கள். யாரையும் திட்டாதீர்கள். வாழ்த்துங்கள்.

சினிமா தற்போது ஐ.சி யூவில் இருக்கிறது. சினிமாகாரர்கள் நமக்குள் சண்டைப்போடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக உட்கார்த்து பேசி பிரச்னைகளை தீர்க்க வேண்டும். சினிமா சங்க நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்.. சினிமாவை வாழ வைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை முதலில் தீர்த்தால் தான் திரைப்படத்துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியும்.