விரைவில் திறக்கப்படும் திரையரங்குகள்: என்னென்ன நிபந்தனைகள் இருக்கலாம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஐந்து மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் தற்போதைய சூழலில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து கிட்ட தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது
இருப்பினும் தியேட்டர்கள் உள்பட இன்னும் ஒருசிலவைகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக திரையரங்கு அதிபர்கள் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் அரசு அதனை பரிசீலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தியேட்டர்கள் விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று இருக்கைகளுக்கு ஒருவர் மட்டுமே பார்வையாளர்களை அமர வைக்க வேண்டும், படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு அம்சம் உள்ள முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்துவது, பார்வையாளர்களுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நிபந்தனைகள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது
அதேபோல் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் தனியாக இருக்கும் திரையரங்குகள் மட்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தியேட்டர்களுக்கு டிக்கெட் வழங்க முழுக்க முழுக்க ஆன்லைனையே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தியேட்டர்கள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதையடுத்து திரை அரங்குகள் திறந்த உடன் ’மாஸ்டர்’ ’சூரரைப்போற்று’ உள்பட அனைத்து படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments