இவ்வளவு தாங்க தமிழக அரசியல்… ஒற்றைப் புகைப்படத்தால் தெறிக்கவிட்ட பிரபல இயக்குநர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
“அழகி“, “பள்ளிக்கூடம்“, “ஒன்பது ரூபாய் நோட்டு“ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த முன்னணி இயக்குநர் தங்கர்பச்சான். இவர் ஒரு இயக்குநராக மட்டும் அல்லாது தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளுக்காகவும் சூழலியல் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளிலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
அவர் தற்போது வரப்போகிற தமிழக அரசியலை குறித்தும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை குறித்தும் ஒரு ஒற்றை புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு பெண்மணி தனது வீட்டிற்கு வெளியே நிற்கிறார். அதோடு அந்த வீட்டின் சுவற்றில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான இரட்டை இலை, உதயசூரியன் என இரு சின்னங்களும் இடம்பெற்று இருக்கின்றன. மேலும் இதற்குமுன்பு தமிழக அரசு கொடுத்த சில இலவசப் பொருட்களும் அந்த வீட்டின் முன்பே கொட்டிக் கிடக்கின்றன.
இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் தங்கர்பச்சான் இந்த ஒற்றைப் புகைப்படம் தமிழக அரசியல் களத்தை பிரதிபலிக்கு என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் நான் படத்திலேயே மிகவும் பிடித்த புகைப்படம் எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments