முன்னணி நடிகர், நடிகையை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

முன்னணி நடிகர் நடிகை நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டதால் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ’அசுரன்’ நாயகி மஞ்சுவாரியார் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை லிஜு கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். 'படவெட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கண்ணூர் மாவட்ட போலீசார் இயக்குனர் லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர்.

தன்னுடன் பணியாற்றிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் இயக்குனர் லிஜு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லிஜு கிருஷ்ணா கைது காரணமாக படப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் இந்த வழக்கு முடியும் வரை லிஜு கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சங்கத்திடம் கோரிக்கை வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

முதல்முறையாக விஜய் படத்தில் இந்த இரண்டும் இல்லை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

முதல் முறையாக விஜய் படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் உருவாக இருப்பதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரசிகரின் கேள்விக்கு தனது முடியை பதிலாக சொன்ன யாஷிகா!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது முடியால் பதில் சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

16 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து விலக்கிய ரஷ்யா… இந்தியாவின் நிலைமை என்ன?

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

11 நாட்களைக் கடந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில்

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா?

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி