தவெக மாநாடு: எதிர்பாராத வகையில் குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்..
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில் திரையுலகினர் அவரது கட்சி குறித்து பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் சமூக வலைதளங்களில் எந்தெந்த திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதே எப்போது பார்ப்போம்.
விஜய் சேதுபதி: "தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்"
சிவகார்த்திகேயன்: "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்"
ஜெயம் ரவி: "சினிமாவில் நீங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்த புதிய பயணம் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா "
வெங்கட் பிரபு: உங்கள் பார்வை பலருக்கு நேர்மறையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் கொண்டு வரட்டும்"
அர்ஜுன் தாஸ்: "உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்"
வசந்த் ரவி: உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் திரைப்படங்கள் மூலம் எங்களில் பலருக்கும் நீங்கள் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுகூரப்படுவீர்கள், பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்"
சிபி சத்யராஜ்: விஜய் அண்ணாவின் உரையை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன். இந்தப் புதிய பயணம் அவருக்கு பாஸிடிவ்வையும், வெற்றியையும் தரட்டும்"
சசிகுமார்: " உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல் வாழ்த்துகள்… விஜய் சார்"
சதீஷ்: " திரைத்துறையைப் போல் இதிலும் வெற்றிக் கொடி நாட்ட வாழ்த்துக்கள்"
ஆர்ஜே பாலாஜி: "அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்கள் மிகப்பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சாக்ஷி அகர்வால்: விஜய் மாநாட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். வரலாற்றைக் காண தயாராக இருக்கிறேன். இந்தப் பயணத்தை ஒன்றாகக் கொண்டாடுவோம்"
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்: "விஜய் அவர்களின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்"
சாந்தனு: விஜய் அண்ணாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள். உங்கள் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற எங்களது வாழ்த்துக்கள். உங்களது பேச்சைக் கேட்கவும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையை அறியவும் ஆவலுடன் இருக்கிறேன்"
சூரி: விஜய் அண்ணே உங்கள் அரசியல் வாழ்க்கையின் புதிய துவக்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மக்கள் சேவையில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் #தமிழகவெற்றிக்கழகம் கட்சிக்கு எனது நல்வாழ்த்துகள்.
மேலும் அர்ச்சனா கல்பாத்தி, நெல்சன், சசிகுமார், தமன், பாடலாசிரியர் விவேக், ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோர்களும் விஜய்யின் அரசியல் கட்சி மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com