குமரியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த்: குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Monday,May 03 2021]

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்பி வசந்தகுமார் அவர்களின் மகனும் தமிழ் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிட்டார்

இந்த தொகுதிகள் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வசந்த் மிக எளிதாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் அவருக்கு 5.76,037 வாக்குகளும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 4.38,087 வாக்குகளும் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விஜய் வசந்த் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்பி ஆகி பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளார் விஜய் வசந்த்.

இதனை அடுத்து விஜய் வசந்த்துக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நடிகர்கள் சரத்குமார், சிவகார்த்திகேயன், சதீஷ், ஜெயம் ரவி, சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் கிரிஷ் உள்பட பலர் விஜய் வசந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், குமரி மக்களுக்கும் தனது நன்றியை விஜய்வசந்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது: என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

More News

முதல்வர் பொறுப்பேற்றதும் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க போகிறது

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி: வாக்கு வித்தியாசம் இவ்வளவுதானா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் சுமார்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் காலை முதலே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வந்தன

மைனா நந்தினியின் சூப்பர் செல்பி: வைரலாகும் மகாலட்சுமியின் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களில் ஒருவர் மைனா என்பது தெரிந்ததே. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது