சட்டசபை தேர்தலில் ஓட்டுபோடாத சினிமா பிரபலங்கள்...!லிஸ்ட் இவ்ளோ பெருசா...?

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

நேற்று காலை முதல் ரஜினி,கமல், சூர்யா,விஜய்,அஜித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து, வாக்களித்து சென்றனர். காலையில் மந்தமான அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றாலும், பின் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். ஆனால் இளையராஜா,ரஹ்மான், பார்த்திபன் போன்ற திரையுலக பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.

தமிழகத்தில் உள்ள மூத்தகுடிமக்கள், பெரும்பாலான இளைஞர்கள், அரசியில் பிரமுகர்கள் என பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார். நேற்று எந்த பிரபலங்கள் வாக்களிக்கவில்லை என்பது குறித்து இதில் பார்ப்போம்.

• சசிகலாவின் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அவரால் வாக்களிக்க முடியவில்லை.

• தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாலையளவில் வந்து வாக்களிப்பார் என அவர் குடும்பத்தினர் பேட்டியளித்த நிலையில், அவரும் ஓட்டுப்போட வரவில்லை. தொண்டர்கள் இவர் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

• ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன்,கவுண்டமணி,வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் வாக்களிக்க வரவில்லை.

• இயக்குனர் பார்த்திபன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதை சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்த இவர் அனைவரயும் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி இருந்தார். உடல்நிலைக்குறைபாடு காரணமாக இவரும் ஓட்டுப்போட வரவில்லை.

• இதே போல் இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் ஓட்டுப்போட வரவில்லை.

• நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தி க்ரே மேன் ஹாலிவுட் திரைப்படத்திற்காக அமெரிக்காவில் இருப்பதால், அவர்களாலும் வாக்களிக்க வரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.