ஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன?
- IndiaGlitz, [Friday,December 06 2019]
ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வர் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து பொதுமக்கள், சமூக வலைதள பயனாளர்கள், பெண்ணியவாதிகள்,, தேசிய மனித உரிமை கமிஷன், அரசியல்வாதிகள் மற்றும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகைகள் சமந்தா மற்றும் வரலட்சுமி ஆகியோர் இது குறித்து கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்.
ஏ.ஆர்.முருகதாஸ்: ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளுக்கு எனது சல்யூட். நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என நம்புகிறேன்.
நடிகை சமந்தா: பயம் ஒன்றே குற்றம் நடப்பதை தடுக்கும் வழி. சிலசமயம் இது ஒன்றுதான் ஒரே தீர்வு.
நடிகை வரலட்சுமி: டாக்டர் சகோதரின் ஆத்மா சாந்தி அடையும் என நம்புகிறேன். நீதி வென்றது. பாலியல் குற்றம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்.