கிரிக்கெட் பந்தை தூக்கி விளாசும் நடிகர் யோகி பாபு? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் நடிகர் யோகி பாபு ஒரே நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். டைமிங் காமெடி, அசத்தலான நகைச்சுவை போன்ற விஷயங்களால் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் இவர் தொடர்ந்து கதாநாயகனாகவும் உருவெடுத்து விட்டார். தற்போது “டிக்கிலோனா“, “கடைசி விவசாயி“, “மண்டேலா“, “அயலான்“, “பன்ருட்டி“ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாடுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் அவ்வபோது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை நடிகர் யோகி பாபு தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இவர் பந்தைத் தூக்கி அடிக்கும் ஷாட்டை பார்த்தால், உண்மையில் இவர் ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரராக இருப்பாரோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் நடிகர் யோகி பாபு தன்னுடைய பள்ளி காலத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஷிப் கோப்பையை வென்ற அணியில் ஒருவராக இருந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதோடு கிரிக்கெட் தவிர இவருக்கு கால்பந்து விளையாட்டின் மீதும் அதிக ஆர்வம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது யோகி பாபு வெளியிட்டு உள்ள கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது
— Yogi Babu (@iYogiBabu) March 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com