'கபாலி'யை அடுத்து 'காஷ்மோரா' தான்.....

  • IndiaGlitz, [Sunday,October 09 2016]

கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ள 'காஷ்மோரா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான டீசரில் வரும் ஒருசில காட்சிகள் 'பாகுபலி'க்கு இணணயாக இருப்பதால் எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வடஅமெரிக்க ரிலீஸ் உரிமையை சினிகேலக்ஸி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இந்நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இதே நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

More News

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி இந்த ஆண்டு அவர் நடித்த 'மிருதன்' படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

இவங்க மூணு பேருக்கும் தம்பியாக நடிக்க விரும்பினேன். சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் 10 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் அதற்குள் மாஸ் நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார்.

ஆன் ஸ்கிரீனிலும் ஆஃப் ஸ்கிரீனிலும் இவர் ஒரு ஜெண்டில்மேன். காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது முதல்முறையாக தல அஜித்துடன் 'அஜித் 57' படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பி

அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படமும் ஒன்று.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜேம்ஸ்பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது.