லட்சுமி ராய் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 11 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லட்சுமி ராய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'சிண்ட்ரெல்லா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா என்பது தெரிந்ததே. இந்த கேரக்டர் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. லட்சுமிராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு , 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும போது, இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார்.

நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம் , குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட்ரல்லா'வுக்குள் புகுந்து விட்டார் என்று கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

டேனியல் புகார்: தூக்கியெறிந்து ஆத்திரமடைந்த கமல்ஹாசன்  

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாளை கடந்தும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. கமல்ஹாசன் வரும் சனி, ஞாயிறு மட்டுமே ஓரளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது

கருணாநிதிக்காக கூடும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கேரள வெள்ளம்: சூர்யா-கார்த்தி செய்த மகத்தான உதவி

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. குறிப்பாக இடுக்கி, ஆலுவா , பாலக்காடு மல்லப்புரம் மற்றும் வாயநாடு பகுதியில் வெள்ளத்தால் நிலச்சரிவும்

'விஸ்வரூபம் 2' முதல் நாள் வசூல் விபரம்

'விஸ்வரூபம் 2' திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

வெள்ள நிவாரண பணி: கேரளாவில் இருந்து கற்று கொள்ள வேண்டிய பாடம்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் சிக்கி அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது