வெற்றிக்கு பின் குருவுக்கு நன்றி சொன்ன சிஷ்யன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டான்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது குரு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவித்து டுவிட் பதிவு செய்துள்ளார்.
நேற்று சிபிச்சக்கரவர்த்தி இயக்கிய ‘டான்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘ டான்’ படம் சூப்பர் என்றும் நல்ல பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் என்ற அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்றும் சிபியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றும் அருமையான படம் என்றும் உணர்வு பூர்வமாக கொண்டு சென்றிருக்கிறார் என்றும் உனக்கு மட்டுமின்றி உன்னுடைய மொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்
இந்த ட்வீட்டுக்கு சிபி சக்கரவர்த்தி தனது நன்றியை தெரிவித்து ’என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை என்றும், என்னுடைய குருவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக சிபி சக்கரவர்த்தி பணிபுரிந்தது மட்டுமின்றி இந்த இரண்டு படங்களிலும் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks a ton to my guru @Atlee_dir sir your appreciation means a lot to me sir
— Cibi Chakaravarthi (@Dir_Cibi) May 13, 2022
Couldn’t express my happiness through words..Am highly elated sir ?? https://t.co/yylzH1TKAo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments